குஜராத் மாநில கலவரத்தின் போது கர்ப்பிணி பெண்ணான பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில் 11 வருடங்கள் சிறை தண்டனை முடிந்த நிலையில், நன்னடத்தையை காரணம் காட்டி 11 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களை விடுதலை செய்வதற்கு மத்திய அரசும் ஒப்புதல் வழங்குகிறது. இதற்கு காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள twitter பதிவில் கூறியிருப்பதாவது, ஒரு கர்ப்பிணி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து அவருடைய குடும்பத்தை கொலை செய்த குற்றவாளிகளை விடுதலை செய்ததுடன் இனிப்பு கொடுத்தும் வரவேற்றுள்ளனர். குற்றவாளி குர்மீத் ராம் ரஹீம் 40 நாள் பரோலில் வெளியே வந்த போது அவருக்கு இனிப்புகள் கொடுத்து வரவேற்றார்கள். குஜராத் மற்றும் ஹரியானா ஆகிய 2 மாநிலங்களும் பாஜக ஆட்சியின் கீழ் இருக்கிறது. மேலும் பலாத்காரம் செய்பவர்களை பாஜக ஹீரோவாக நடத்துவது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.