Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஏன் டா ? குடிக்குறிங்க…. தட்டிக் கேட்ட காவலர் மீது தாக்குதல் …!!

பல்லாவரம் அருகே பொது இடத்தில் மது அருந்திய இளைஞர்களைத் தட்டிக்கேட்ட தலைமை காவலர் மீது தாக்குதல் நடத்திய மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் மாரியம்மன் கோயில் தெரு அருகே மணிகண்டன், காந்தி, இன்பராஜ் ஆகிய மூன்று பேரும் மது அருந்திக்கொண்டிருந்ததாகத் தெரிகிறது.அப்போது, அந்த இடத்தில் காவல் ரோந்து பணியில் ஈடுபட்ட தலைமை காவலர் பால்துரை இதுகுறித்து தட்டிக் கேட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மூவரும் மது போதையில் தலைமை காவலர் பால்துரையின் சட்டையை பிடித்து இழுத்து தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், காவலரை தாக்கிவிட்டு தலைமறைவான மணிகண்டன், காந்தி, இன்பராஜ், ஆகிய மூன்று பேரையும் சங்கர் நகர் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் தாம்பரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Categories

Tech |