Categories
சினிமா தமிழ் சினிமா

‘விக்ரம் வேதா’ ரீமேக்கில் இருந்து அமீர்கான் விலகியது ஏன்….? வெளியான காரணம்….!!!

விக்ரம் வேதா ரீமேக்கில் இருந்து அமீர்கான் விலகியதற்கான காரணம் தெரியவந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘விக்ரம் வேதா’ இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றது. இதைத் தொடர்ந்து இப்படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்து வருகின்றனர். பாலிவுட்டில் ரீமேக் செய்யப்படும் இப்படத்தில் மாதவனாக சயிப் அலிகானும், விஜய் சேதுபதியாக அமீர்கானும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

அதன்பின் அமீ ர் கான் படத்தில் இருந்து விலகினார். இதைத்தொடர்ந்து அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ரித்திக் ரோஷன் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் இப்படத்திலிருந்து அமீர்கான் விலகியதற்கான காரணம் வெளியாக உள்ளது. அதன்படி, அமீர்கான் இப்படத்தின் கதையை ஹாங்காங் பின்னணியில் எடுக்க படக்குழுவினரிடம் சொல்லியுள்ளார். அதற்கேற்றபடி இக்கதையும் மாற்றி எழுதப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையே பிரச்சினைகள் நிலவி வருவதால் அமீர்கானின் இந்தத் திட்டம் செயல்படவில்லை. அமீர்கான் நடிப்பில் வெளியான ‘தங்கல்’ படம் சீன மொழியில் வெளியாகி அது மாபெரும் வரவேற்பை பெற்றது. அதேபோல் இப்படத்தையும் உருவாக்க அமீர் கான் நினைத்திருந்தார். ஆனால் அதற்கு தற்போது வாய்ப்பில்லை என்று தெரிந்ததும் அவர் இப்படத்தில் இருந்து விலகியுள்ளார்.

Categories

Tech |