பிரதமர் நரேந்திர மோடி எல்லையில் உள்ள லடாக் பகுதியில் தீடீர் ஆய்வை நடத்தி வருகின்றார்.
பிரதமர் நரேந்திர மோடி எந்த முன்னறிப்பிப்புமின்றி இந்தியா – சீனா எல்லை பகுதியில் இருக்கும் லடாக்கிற்கு சென்றார். அங்குள்ள பகுதியில் ஆய்வு நடத்திய பிரதமர் இந்தோ – திபெத் எல்லைப் படையில் இருக்க கூடிய எல்லை பாதுகாப்பு வீரர்கள் உள்ளிட்ட முக்கியமான வீரர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் நேரடியாக கலந்து ஆலோசித்து இருக்கிறார். ராணுவ முப்படை தளபதியும் இருந்திருக்கிறார். இந்த பயணம் என்பது ராணுவ வீரர்களுக்கு ஒரு உற்சாகம் கொடுக்கும் பயணமாக பார்க்கப்படுகின்றது.
ஒருவேளை வேறு ஏதேனும் பிரச்சனை வந்தாலும் கூட ஒரு தைரியத்தை கொடுக்க கூடிய வகையிலும் இருக்கும். அதே போல இந்தியா இவ்வளவு பெரிய பிரச்சினையை சந்தித்திருக்கிறது. அண்டை நாட்டின் சீனாவுடன் பெரிய பிரச்சனை சந்தித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நேரடியாக உணர்த்துவதற்கும் ஒரு நாட்டின் பிரதமர் இப்படியான பிரச்சினை மிகுந்த இடத்திற்கு சொல்கிறார். எல்லை பிரச்சினையில் இந்தியாவின் நிலைப்பாட்டை உலகிற்கு உணர்த்தவே பிரதமர் பயணம் என தகவல் வெளியாகி இருக்கின்றது.