Categories
அரசியல் மாநில செய்திகள்

ஏன் தளபதி இப்படி பண்ணுறீங்க….. 2 நாளுமே வெளிநடப்பு தானா ? ஸ்டாலின் விளக்கம் …!!

தமிழக சட்டப்பேரவையில் இன்றைய கூட்டத்தொடரை புறக்கணித்து திமுகவினர் 2ஆவது நாளாக வெளிநடப்பு செய்தனர்.

2_ஆம் நாளான இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய தமிழக சட்டப்பேரவையில் எதிர்கட்சியான திமுகவினர் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் கூறுகையில் , கடந்த 2_ஆம் ஆம் தேதி சட்டப்பேரவை தலைவருக்கு , இந்திய குடியுரிமை திரும்ப சட்டத்தை திரும்ப பெற வேண்டும். அதை சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினேன்.

இந்த விவாதம் எடுத்துக் கொள்ளப்படுமா ? எடுத்துக் கொள்ளப்படாதா ? என்பது குறித்து எந்த தகவலும் எனக்கு தெரிவிக்கப்படவில்லை. வருகின்ற 9_ஆம் தேதியோடு சட்டசபை கூட்டத்தொடர் முடிவடைய இருப்பதால் இதனை நிச்சயமாக  விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதை புரிந்து கொண்டு இன்று அவையில் விவாதம் எழுப்பினோம்.

இன்றைக்கு தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் போராட்டங்கள் , ஆர்ப்பாட்டங்கள், துப்பாக்கிச்சூடு , சாவுகள் என்று  தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது. ஆகவே இதை முக்கிய பிரச்சினையாக கருதி நாங்கள் சட்டமன்றத்திலே எழுப்பினோம். அதற்கு சபாநாயகர் அனுமதி தரவில்லை.

இந்த சட்டத்தை கேரளா , புதுவை , மேற்கு வங்கம் , ராஜஸ்தான் மத்திய பிரதேசம் , பஞ்சாப் , டெல்லி , ஜார்கண்ட் போன்ற மாநிலம் கடுமையாக எதிர்த்து கொண்டிருக்கிறார்கள் . மேலும் இந்த சட்டத்திற்கு ஆதரவாக பாராளுமன்றத்திலே ஓட்டுப் போட்ட கட்சிகளின் முதல்வர்கள் ஜெகன் மோகன் , நிதீஷ் குமார் தங்கள் மாநிலத்தில் அதை அனுமதிக்க மாட்டோம் என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அதிமுக மாநிலங்களவை ஓட்டு போட்டுள்ளது.

இந்த சட்டத்தை சட்டமன்றத்திலாவது எதிர்த்து தீர்மானம் போடும் என்று பார்த்தால் மத்திய பிஜேபி அரசுக்கு அடிமை சேவகம் செய்ய கூடிய ஒரு ஆட்சியாக இந்த ஆட்சி இருக்கிறது.ஆகவே இதை கண்டித்து திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் வெளிநடப்பு செய்கிறோம் என்று தெரிவித்தார். திமுக நேற்றும் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |