Categories
மாநில செய்திகள்

மணல் திருட்டை தடுக்காதது ஏன் ? தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி ..!!

அமராவதி ஆற்றில் மணல் அள்ளுவதை தடுக்கவும், மணல் எடுக்க ஆற்றில்  போடப்பட்ட பாதை அகற்றவும் கூறி வழக்கு கரூரை சேர்ந்த குணசேகரன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்ற போது, மணல் திருட்டை தடுக்க பல்வேறு உத்தரவுகள் பிறப்பித்தும் மணல் திருட்டை தடுக்காதது ஏன் என்றும், மணல் திருட்டு நடப்பது எப்படி என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியிருக்கிறது.

மணல் திருட்டை தடுக்க எடுத்த நடவடிக்கை குறித்து தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருக்கிறது. தமிழக முழுவதும் சட்டவிரோத மணல் திருட்டு என்பது இருக்கக்கூடாது என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை தனது உத்தரவையில் தெரிவித்து இருக்கிறது.

Categories

Tech |