அதிமுக கட்சியில் அதிகார மோதல் அதிகரித்த நிலையில் ஓபிஎஸ் அணியிலிருந்து இபிஎஸ் பக்கம் தாவுவதும், இபிஎஸ் பக்கமிருந்து ஓபிஎஸ் அணிக்கு தாவுவதுமான சம்பவங்கள் தான் நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் கோவை செல்வராஜ் ஓபிஎஸ் அணியில் இருந்து இபிஎஸ் பக்கம் சேர்ந்து விட்டார். இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளரான பெங்களூரு புகழேந்தி தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சார திட்டத்தை கொண்டு வந்தது ஜெயலலிதா தான். அவர் கொண்டு வந்த திட்டங்களை தற்போது யாராலும் கொண்டுவர முடியாது.
திமுக ஆட்சியில் வீட்டில் பயன்படுத்தப்படும் மோட்டார்களுக்கு மின் கட்டணம் வசூலிப்பது முதல்வர் ஸ்டாலினுக்கு மிகப்பெரிய பின்னடைவாக தான் அமையும். கோவை செல்வராஜ் திடீரென அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை குறித்து பேசி இருக்கிறார். ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்ந்த 34-வது நாள் நாங்கள் அனைவரும் வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், மருத்துவமனை நிர்வாகம் தான் முடிவெடுக்க வேண்டியிருந்தது. இதுவரை ஓபிஎஸ் அணியில் இருந்த அவர் ஏன் திடீரென முடிவை மாற்றினார் என்பது தெரியவில்லை. மேலும் அவருடைய மனப்பக்குவத்தை திருத்திக் கொண்டு எங்களுடைய அணிக்கு மீண்டும் வரவேண்டும் என கூறினார்.