சுல்தான் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா ஏன் பின்னணி இசை மட்டும் அமைத்திருக்கிறார் என்ற விவரம் தெரியவந்துள்ளது.
முன்னணி நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் சுல்தான். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த ட்ரெய்லர்க்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஆனால் இப்படத்திற்கு விவேக்-மெர்வின் இசை அமைத்துள்ளார். ஆகையால் யுவன் சங்கர் ராஜா ஏன் ட்ரைலர்க்கு மட்டும் இசை அமைத்திருக்கிறார் என்ற கேள்வியை பலரும் எழுப்பி வந்தனர். இதற்கு தற்போது விடை கிடைத்துள்ளது.
சுல்தான் படத்தில் பின்னணி இசையை யுவன் சங்கர் ராஜாதான் அமைத்திருக்கிறார். அதனால் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்திற்கு அனுபவம் வாய்ந்த இசையமைப்பாளர் பின்னணி இசை அமைத்தால் இப்படத்திற்கு பலமாக இருக்கும் என்று படக்குழு இந்த முடிவை எடுத்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது.