செய்தியாளர்களை சந்தித்த திமுக வின் செய்தி தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி, கோவை சம்பவத்தில் அண்ணாமலையின் அணுகுமுறை குறித்து நாங்க பேச வேண்டிய தேவை இருக்கு ? எந்த வழக்கு குறித்தும் அரசியல் கட்சிகளாக சந்தேகமும் இருந்தால் அதை ஆளுங்கட்சி எதிர்க்கட்சி இல்ல ஒரு அறிக்கைகள் மூலமாக மக்களிடம் விளக்கலாம், கோரிக்கை வைக்கலாம்.
ஆனால் காவல்துறையின் நடவடிக்கைகளையோ, ஒன்றிய ஏஜென்சியின் நடவடிக்கைகளையோ நீதிமன்ற நடவடிக்கைகயையோ ஒரு பொலிட்டிக்கல் கட்சி தலையிட முடியாது. அந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல், அண்ணாமலை முதல்வர் ஏன் பேசல ? ஏழு நாளா என்னாச்சுன்னு சொல்றாரு ? 27ஆம் தேதி மாலை மத்திய அரசு நிறுவனமான தேசிய புலனாய்வு முகமையிடம் இந்த வழக்கை ஒப்படைச்சாச்சு.
ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம் என்றால் ஏன் NIAயிடம் ஒப்படைக்கப்பட்ட மூன்று நாள் ஆட்சி. இந்த மூணு நாள்ல இந்தியாவுடைய பிரதமர் அமைச்சர் மோடி ஏன் இந்த வழக்கு குறித்து பேசவில்லை என நான் கேள்வி கேட்டா எப்படி முட்டாள்தனமான வாதமாக இருக்கும். மாநில அரசு பேசலைன்னு சொல்றாரு, பரவால்ல.
சம்பவம் நடந்த மறுநாளே முதல்வர் காவல்துறை அதிகாரிகளை நேரடியாக போக சொல்கிறார். நேர போறாங்க… ரீவ்வியூ மீட்டிங் நடக்குது, வழக்கின் தன்மையையடுத்து பன்னாட்டு பயங்கரவாத அமைப்பு தொடர்புடையது இருக்குமா ? என்கின்ற எண்ணத்தில், ஆதாரங்களின் அடிப்படையில் NIAவிடம் ஒப்படைக்கப்படுகிறது.
மத்திய அரசும் அதை ஏற்றுக் கொண்டு, வழக்கு நடத்துகிறார்கள். ஒப்படைக்கப்பட்டு மூன்று நாட்கள் ஆச்சு ? ஏன் இந்தியாவுடைய பிரதமர் அமைச்சர் பிரதமர் மோடி இன்னும் அதை பத்தி பேசவில்லை என்றால் எவ்வளவு எப்படி இருக்கும் ? என ராஜிவ் காந்தி கேள்வி எழுப்பினார்.