PS – 1படத்தில் ரஜினி நடிக்காததற்கான காரணத்தை மணிரத்னம் கூறியுள்ளார்.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ”பொன்னியின் செல்வன்”. இந்த படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் மற்றும் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது.
இந்த படத்தின் முதல் பாகம் கடந்த 30-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தில் ரஜினிகாந்த் ஏன் நடிக்கவில்லை? என மணிரத்தினத்திடம் கேட்கப்பட்டது. அதற்கு, ”இந்தப் படத்தில் ரஜினிகாந்த் நடிக்க வேண்டும் என அன்புடன் கேட்டது உண்மை. இந்த கதை நிறைய கதாபாத்திரங்கள் கொண்டது. எல்லாவற்றுக்கும் இடையில் சூப்பர் ஸ்டாரை கொண்டு வருவது சரியாக இருக்காது” என்பதால் தான் மறுத்து விட்டேன் என கூறியுள்ளார்.