Categories
லைப் ஸ்டைல்

பெண்கள் காலில் மெட்டி அணிவது எதற்காக…? அறிவியல்பூர்வ உண்மை இது தான்…!!

அறிவியல்பூர்வமாக கால் விரலில் மெட்டி அணிவதால் பெண்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்று பார்க்கலாம்.

நம்முடைய முன்னோர்கள் எப்போதுமே அறிவியலும், ஆன்மீகமும் கலந்த விஷயங்களைத்தான் நமக்கு அறிமுகம் செய்கின்றனர். ஒரு பெண் திருமணமானவள் என்பதை உணர்த்த அவருடைய காலில் அணியும் மெட்டியும், கழுத்தில் மாங்கல்யம், நெற்றியில் வைத்து கொள்ளும் குங்குமமும் தான்.  காலில் மெட்டி அணிவது அடையாளம் என்பதை விட அதில் ஆரோக்கியம் உள்ளது என்பது தான் அறிவியல்பூர்வ உண்மை. பெண்களின் கருப்பைக்கான முக்கிய நரம்புகள் கால் விரல்களிலேயே இருக்கிறது.

நாம் வெள்ளியில் மெட்டி அணிவதால் வெள்ளியில் இருக்கும் ஒருவித காந்த சக்தி கால் நரம்புகளில் ஊடுருவி நோய்களை தடுக்கும் ஆற்றலுடையது. முக்கியமாக பெண்களின் கருப்பை நோய்களை கட்டுபடுத்துகிறது. பெண்கள் மெட்டியை பெருவிரலில் பக்கத்திலுள்ள இரண்டாவது விரலில் அணிவதன் மூலம் கர்ப்பப்பை ஆரோக்கியமாகவும், கர்ப்பப்பையில் இரத்த ஓட்டம் சீராகவும் பாதுகாக்கப்படுகிறது என்று அறிவியல் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

கர்ப்பத்தின் போது உருவாகும் மயக்கம், வாந்தி போன்றவற்றை குறைக்கவும், கர்பப்பையிலுள்ள நீரின் சமநிலையாக வைக்கவும் உதவுகிறது. கால் விரலில் மெட்டி அணிந்து நடக்கும் போது பூமியில் அழுத்தப்படுவதால் நம்முடைய உடல் நோய்களையும், முக்கியமாக கர்ப்பிணி பெண்களின் நோய்களையும் தீர்க்கிறது. ஆகவே நாம் மெட்டி அணிவது நல்லது.

Categories

Tech |