Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எதுக்காக இப்படி பண்ணிருப்பாங்க… ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி… கதறும் குடும்பத்தினர்…

நாமக்கல் மாவட்டத்தில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி உடம்பில் வெட்டு காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்துள்ள ராசிகுமாரிபாளையம் பகுதியில் சிவகுமார்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பார்கவி என்ற மனைவியும், லினிஷா(4) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் சிவகுமார் ராணுவத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் பணி ஓய்வு பெற்று வீடு திரும்பி குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து சிவகுமார் நேற்று முன்தினம் பரளி மல்லுமாச்சம்பட்டியில் உள்ள சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனைத்தொடர்ந்து இரவு ஆகியும் வீடு திரும்பாததால் உறவினர்கள் பதற்றம் அடைந்து அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர். அபோது நேற்று அதிகாலையில் வளையப்பட்டி சாலையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அருகில் வெட்டு காயங்களுடன் சிவகுமார் உயிரிழந்து காணப்பட்டுள்ளார். மேலும் அப்பகுதி வழியாக சென்றவர்கள் சிவகுமாரின் உறவினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சிவகுமார் மனைவி மற்றும் குடும்பத்தினர் உடலை பார்த்து கதறி அழுதுள்ளனர். இந்நிலையில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மோகனூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான கரணம் குறித்தும், கொலையாளி யார் என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி வெட்டு காயங்களுடன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Categories

Tech |