Categories
அரசியல் மாநில செய்திகள்

ஏன் இப்படி ஜாதி சண்டை போடணும்… நாம எல்லாரும் ஒண்ணா நின்னால்… எதிரிக்கு உடையும் மண்ட… கொந்தளித்த சீமான் !!

நாம் தமிழர் கட்சி நடத்திய போராட்டத்தில் பேசிய அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்,  நம்ம எல்லாரும் குறவர்கள் குறப்பய மக்கள்… கோன் என்றால் யாரு ? அரசன்.  நீ அரசன் என்பதை விட உனக்கு பெருமையா என்ன இருக்க்கு ? அப்பறோம் எதுக்கு யாதவ் போட்ட ? உனக்கு என்ன பிரச்சனை ? உனக்கு இந்த நோய் என்றைக்கு போகும். யாதவ் எந்த மொழி சொல்லுச்சு…

அவனும் மாடு மேய்க்கிறான்,  நானும் மாடு மேய்க்கிறேன்.  நான் கோன் … அவ வந்து லல்லு பிரசாத் கோனு என போட சொல்லு. நான் யாதவன்னு போடுறேன். ஏன் இப்படி அறிவுகெட்ட அலையனும் நம்ம.. நான் வேற என்கிற திமிரு இருக்கணும். நான் ரெண்டாவது பெரிய தாய்குடி கோன்.  தமிழ் இளம் தலைமுறையாராவது இங்கே யாதவர் அப்படின்னு எந்திரிச்சு வந்த….

போடா அங்குட்டு போடா அப்படின்னு சொல்லிடுவேன். மருத திணைக்கும்,  குறிஞ்சி திணைக்கும் இடையில் வாழ்ந்ததால் நாம் இடையர்கள். அது குடிப்பெயர் இல்ல,  காரணப்பெயர். நம் குடிப்பெயர் கோன் ஆயர். இத நல்லா விளங்கிக்கணும். கீழ வந்தோம்…  நிலம் பள்ளமா இருந்துச்சு.. அங்க வந்து சேர்ந்த நம்ம எல்லாருமே பள்ளர்கள் தான்..

இங்க இருக்குற எல்லாருமே பள்ள பயல்கள் தான். திமிரா இருக்கணும்.. அங்க நிலம் பள்ளமாக இருந்ததால்தான், அது பள்ளர்கள் என்று அழைக்கப்பட்டோமே ஒழிய,  அது நமது குடி பெயர் அல்ல, நாம் வேளாளர்கள். வெறும் தேவர் போட்டாலும் ஒன்னு தான்,  தேவேந்திரன் போட்டாலும் ஒன்னு தான். ஒரு தாய் பிள்ளைகளில் இவ்வளவு சண்டை. நம்ம இரண்டு பேரும் ஒன்றாய் நின்றால் எதிரிக்கு உடையும் மண்ட என பேசினார்.

Categories

Tech |