சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் 7ம் தேதி முதல் டாஸ்மார்க் மதுக்கடைகளை திறக்கலாம் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்க்கு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதே போல திருச்செந்தூர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். இந்த வழக்கில் தமிழகத்தில் 7ம் தேதி மதுக்கடைகளை திறக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு பல நிபந்தனைகள் விதித்தது.
முறையாக கடைபிடியுங்க:
தனி மனித இடைவெளியை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும். 5 நபர்களுக்கு மேல் கூட்டக் கூடாது. மதுபானக் கடைகளின் பார்களை திறக்கக் கூடாது.மூன்று நாளைக்கு ஒருமுறை ஒருவருக்கு ஒரு பாட்டில் மட்டுமே விற்க வேண்டும். மதுவங்குவோரின் பெயர், முகவரி, ஆதார் என்னுடன் ரசீது தரவேண்டும்.ஆன்லைன் மூலமாக பணம் செலுத்தும் நடைமுறை கொண்டு வர வேண்டும்.ஆன்லைன் மூலம் வாங்குவோருக்கு இரண்டு மது பாட்டில் வழங்கலாம் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது.
அனைத்தையும் மீறிட்டாங்க:
இந்த நிலையில் தான் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகி மற்றும் சில வழக்கறிஞ்சர்கள் சார்பாக நேற்று புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மதுக்கடைகளை திறக்க நீதிமன்றம் வழங்கிய நிபந்தனைகள் முறையாக பின்பட்டப்படவில்லை. அதிகமானோர் ஒன்றுகூடி மதுவாங்கி சென்றனர். இதனால் கொரோனா நோய் தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்பிருக்கின்றது எனவே மதுக்கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.
இங்க பாருங்க, ஆதாரம் இருக்கு:
மனுதாரரின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் இந்த வழக்கை நேற்று காலை அவசர வழக்காக விசாரித்தனர். அப்போது தனிமனித இடைவெளி பின்பற்றப்படாதது. 5 பேருக்கும் அதிகமானோர் கூட்டமாக கூடி மதுவங்கிச் சென்றது என புகைப்படங்களுடன் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மார்க் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டது.
மேல்முறையீடு:
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதில் எப்படியாவது மதுக்கடைகளை திறப்பதற்கு அனுமதி வாங்கிவிட வேண்டும் என்று தமிழக அரசு முனைப்பு காட்டி இந்த வலக்கை அணுக இருக்கின்றது. இதற்கான தமிழக வழக்கறிஞ்சர்கள் மும்மரமாக இருபட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்.
இத சொல்லி பேசுங்க:
இந்த வழக்கின் முக்கியத்துவம் உணர்ந்து வழக்கில் தீர்ப்பை சாதகமாக்கி கொள்ள பல முக்கியமான விஷயங்களை முறையீட்டு மனுவில் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. அதில், சமூக இடைவெளி கடைபிடிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டும்,மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சொல்லி இருக்கக்கூடிய அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் முறையாக கடைப்பிடிக்கவும். டாஸ்மார்க் மதுக்கடை என்பது அரசின் கொள்கை முடிவு. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. ஆன்லைனில் மது விற்பனை செய்வது என்பது தற்போது சாத்தியமில்லாத ஒன்று என்றும் எனவே சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசு முறையீடு செய்துள்ளது.
திங்கட்கிழமை விசாரணை:
தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை திங்கள்கிழமை காலை நடைபெற இருக்கின்றது.அதற்கான வேளைகளை தமிழக அரசு வழக்கறிஞர்களும் மும்முரமாக பார்த்துக்கொண்டு இருக்கின்றார்கள்.இதனால் திங்கட்கிழமை இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு அன்றைய தினமே முக்கியமான தீர்ப்பு வருவதற்கான வாய்ப்பும் அதிகமாக இருக்கிறது.
கேவியட் மனு:
இந்த வழக்கில் மக்கள் அதிகாரம், மகளிர் ஆயம் அமைப்புகள் இந்த வழக்கில் தங்கள் தரப்பு வாதத்தை கேட்டு உத்தரவு பிறப்பிக்கவேண்டுமென கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளார் . எல்லாமே நல்லபடியாக சென்று கொண்டு இருக்கின்றது என்று நினைத்துக்கொண்டு இருந்த தமிழக அரசுக்கு கேவியட் மனுவால் கூடுதல் சிக்கல் எழுந்துள்ளது. இதனால் திங்கள் கிழமை ஏதேனும் பாதகமான உத்தரவு பிறபிக்க நேரிடுமோ அல்லது சாதகமான உத்தரவு பிறப்பிக்க கால தாமதமாகிவிடுமோ என்ற அச்சம் தமிழக அரசுக்கு எழுந்துள்ளது.