Categories
உலக செய்திகள்

உக்ரைன் குறித்த தீர்மானம்…. இந்தியா ஏன் வாக்களிக்கவில்லை…? விளக்கமளித்த டி.எஸ் திருமூர்த்தி…!!!

உக்ரைன் பிரச்சனை தொடர்பான தீர்மானத்தில் இந்தியா வாக்களிக்காமல் இருந்ததற்கு என்ன காரணம்? என்று ஐ.நாவிற்கான இந்திய தூதர் தெரிவித்திருக்கிறார்.

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அமர்வில் உக்ரைன் மீது நடக்கும் தாக்குதலின் மனிதாபிமான விளைவுகள்” என்னும் தலைப்பிலான தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. ஆனால் இந்த தீர்மானத்திற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இந்தியா கலந்து கொள்ளவில்லை. உக்ரைன் பிரச்சினை குறித்த சிறப்பு அவசர அமர்வில் இந்த தீர்மானத்திற்கு 140 வாக்குகள் ஆதரவாக கிடைத்திருந்தது. மேலும் தீர்மானத்திற்கு எதிராக 5 வாக்குகள் கிடைத்தது.

இந்நிலையில், இந்த வாக்கெடுப்பில் இந்தியா கலந்து கொள்ளாதது குறித்து ஐநா சபைக்கான  இந்திய நிரந்தர பிரதிநிதியான டி.எஸ் திருமூர்த்தி தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, இந்தியா இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. ஏனெனில் போரை முடிவுக்கு கொண்டு வரவும், உடனடியாக மனிதாபிமான உதவிகளை அளிப்பதிலும் கவனமாக இருக்கிறோம்.

இந்த சவால்களை சந்திக்க வேண்டியதற்கான அவசியம், அந்த தீர்மானத்தில் சரியாக இல்லை. உக்ரைனின் தற்போதைய நிலை தொடர்பில், இந்தியா அதிக வருத்தமடைந்திருக்கிறது என்று பதிவிட்டிருக்கிறார்.

Categories

Tech |