Categories
அரசியல்

தீபாவளிக்கு முந்தைய நாள் எதற்காக “எம தீபம்” ஏற்றப்படுகிறது….? புராணங்கள் சொல்லும் வரலாறு இதோ….!!!!

இந்தியாவில் வருகிற 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளி பண்டிகையானது வட இந்தியாவில் 5 நாட்கள் திருவிழாவாக கொண்டாடப்படும். இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாள் வீட்டில் யம தீபம் ஏற்றுவார்கள். ‌ இந்த தீபத்தை தற்போது எப்படி ஏற்றலாம் எதற்காக ஏற்றுகிறார்கள் என்பது குறித்து பார்க்கலாம். அதன்படி ஐப்பசி தேய்பிறை திரியோதசி அன்று பிரதோஷ நேரத்தில் வீட்டின் தெற்கு திசை நோக்கி வீட்டில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும்.

இதில் குறைந்தது 5 விளக்குகளாவது இருக்க வேண்டும். இதனால் வீட்டில் இருப்பவர்கள் ஆரோக்கியமாக வாழ்வார்கள். அதன் பிறகு வீட்டில் துர்மரணம் அடைந்தவர்கள் பிரச்சனைகளை நீக்கி நன்மைகள் செய்வார்கள் என்றும் கூறப்படுகிறது. தீபாவளிக்கு முந்தைய நாளில் இந்த தீபத்தை ஏற்றுவது நம்முடைய மரபு. இந்த தீபத்தை ஏற்றுவதன் மூலம் குடும்பம் விருத்தியாகும், தொழில் முன்னேறும், திருமண தடைகள் நீங்கும், சொத்துக்கள் சேரும் என்பது ஐதீகம்.

இந்நிலையில் மஹாலயா அமாவாசை அன்று நம் முன்னோர்கள் பூலோகத்திற்கு வருகிறார்கள் என்று கூறப்படும் நிலையில் அவர்களை மீண்டும் பூலோகத்திற்கு அனுப்புவதற்கு வெளிச்சம் காட்டுவதற்காகத்தான் யம தீபம் ஏற்றப்படுகிறது. இதனையடுத்து வீட்டின் வெளியே உள்ள உயரமான பகுதியில் விளக்கேற்றுவதுடன், தெற்கு திசை நோக்கி நம் முன்னோர்களை மனதில் நினைத்து விளக்கேற்ற வேண்டும். இந்த விளக்குகளை மீண்டும் வீட்டிற்குள் கொண்டு சென்று பயன்படுத்தக்கூடாது.

வட இந்தியாவைப் பொறுத்தவரை கோதுமை மாவில் செய்யப்பட்ட விளக்குகளை தான் தீபம் ஏற்றுவதற்கு பயன்படுத்துவார்கள். ஆனால் அகல் விளக்கு பயன்படுத்தினால் கூட போதுமானது தான். அதன் பிறகு விளக்குகளை ஏற்றுவதுடன் எடுக்கும் போதும் பின்புறமாக நின்று தான் எடுக்க வேண்டும். விளக்கு ஏற்றும்போதும் சரி எடுக்கும் போதும் சரி விளக்கு முன் செல்லக்கூடாது. அதோடு விளக்கு தானாக அணைந்த பிறகு தான் அதை எடுக்க வேண்டும்.

இந்த விளக்கை மாலை 5.45 மணி முதல் ஒரு மணி நேரத்திற்கு ஏற்றி வைத்தால் போதுமானது. இதைத்தொடர்ந்து ஐப்பசி மாதத்தில் வரும் வளர்பிறை துவிதிதியை எம துவிதிதியை என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் எமதர்ம ராஜன் அன்றைய தினம் தன்னுடைய சகோதரி வீட்டிற்கு சென்று உணவருந்தி விட்டு அவர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கி இருப்பார்.

இதனால்தான் தீபாவளி முடிந்த பிறகு சகோதரிகள் தங்களுடைய சகோதரர்களை வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கு விருந்து பரிமாறி ஆசிர்வாதம் பெற்றுக் கொள்கிறார்கள். அதன் பிறகு இந்நாளில் சகோதரர்களை வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுப்பதால் ஆயுள் பெருகி, தீர்க்க சுமங்கலியாக வாழ்வார் என்று எமதர்மராஜன் ஆசீர்வாதம் செய்ததாகவும் புராணங்கள் கூறுகிறது. மேலும் தீபத்தை ஆண், பெண் இருவரும் ஏற்றிக் கொள்ளலாம். ஆனால் கர்ப்பிணி பெண்கள், உடல்நலம் சரியில்லாதவர்கள், புதிதாக திருமணமானவர்கள், உடலில் காயம் இருப்பவர்கள் ஏற்றக் கூடாது என்று சொல்லப்படுகிறது.‌

Categories

Tech |