Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஏன் நான்கு வருடங்களாக நடிக்கவில்லை…? அதிதி பாலன் விளக்கம்….!!!

பிரபல நடிகை அதிதி பாலன் நான்கு வருடங்களாக ஏன் சினிமாவில் நடிக்கவில்லை என்பதற்கான விளக்கத்தை அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் அதிதி பாலன் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘அருவி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக இத்திரைப்படத்தில் அதிதி பாலன் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. மேலும் இப்படத்திற்காக அவர் சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றுள்ளார்.

ஆனால் நடிகை அதிதி பாலன் இந்த படத்தை தொடர்ந்து ஒரு ஆந்தாலஜி படத்தில் மட்டுமே நடித்து இருந்தார். இதை அடுத்து நான்கு வருடங்களுக்கு பிறகு ‘கோல்டு கேஸ்’ எனும் மலையாளத் திரைப்படத்தில் அதிதி நடித்திருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அதிதி பாலனிடம் நீங்கள் ஏன் நான்கு வருடங்களாக படத்தில் நடிக்கவில்லை என்று கேள்வி கேட்கப்பட்டது.

அப்போது அவர் கூறியதாவது, “நான் எடுத்துக் கொண்ட இந்த நான்கு ஆண்டு இடைவெளி சினிமாவைப் பற்றி புரிந்து கொள்வதற்காகவே. அந்தவகையில் கடந்த சில ஆண்டுகளாக நான் சினிமா துறையை பற்றி புரிந்து கொண்டு வருகிறேன்.

மேலும் சினிமாவில் நான் என்ன செய்ய விரும்புகிறேன் என்பதையும் அதில் இருக்கும் முக்கிய விஷயங்களை பற்றியும் கற்றுக் கொள்வதற்காக நான் இந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டுள்ளேன் என்று கூறியுள்ளார். இதை தொடர்ந்து அதிதி பாலன் தற்போது “நவரசா” எனும் திரைப்படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |