நீட் தேர்வை ஏன் திரும்ப பெறக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
நீட்தேர்வு ஆள்மாறாட்டம் குறித்த பல்லக்கு கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அமர்வு விசாரித்தது இந்த வழக்கின் இன்றைய விசாரணையில் ஆள்மாறாட்டம் தொடர்பாக சிபிசிஐடி வழக்கறிஞர் தேசிய தேர்வு முகமையிடம் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் கைரேகை , ஆவணங்கள் பெறப்பட்டதாகவும் , தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு மருத்துக் கல்லூரி மற்றும் நிகர் நிலைப் பல்கலைக் கழகங்களில் விசாரணை நடைபெற்று வருவதாகவும், எவ்வளவு காலத்தில் விசாரணையை முடிக்க முடியும் என்பது போன்ற பட்டியலை வியாழக்கிழமை தாக்கல் செய்கிறோம் என்று தெரிவித்தனர்.
அதே நேரம் தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கையில் நீட் தேர்வு மூலமாக தேர்ச்சி பெற்று இந்த ஆண்டு மருத்துவர்கள் சேர்ந்தவர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றதாகவும் , 2,3 முறை நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களாக இருக்கிறார்கள் என்றும், முதல் முறை தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை குறைவு என்றும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதை நீதிபதிகள் பதிவு செய்து கொண்டு இதே போல ஆள்மாறாட்டம் தொடர்பாக வேறு ஏதேனும் புகார் வெளி மாநிலங்களிலிருந்து வந்து இருக்கிறதா ? என்று மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தது.
இது குறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள் திமுக , காங்கிரஸ் என முந்தைய அரசு கொண்டு வந்த திட்டங்களை மறுபரிசீலனை செய்வது அதைத் திரும்பப் பெறுவது குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா ? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதுதொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டது.
மேலும் அரசு மருத்துவர் போராட்டத்தில் ஈடுபடும் தொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதிகள் அரசு மருத்துவர்களுக்கு உரிய ஊதியத்தை வழங்க வேண்டியது அரசின் கடமை என்று தெரிவித்த நீதிபதிகள் மருத்துவ கல்லூரி கதவுகள் ஏழை மாணவர்களுக்கு திறக்காதது என்பது உண்மையே என்று வேதனை தெரிவித்த நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணையை வரும் 7-ம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.