Categories
உலக செய்திகள்

“இதற்காக தான் இந்தியாவிற்கு தடுப்பூசி அனுப்பவில்லை!”.. அமெரிக்கா வெளியிட்ட காரணம்..!!

அமெரிக்க அரசு, இந்தியாவிற்கு கொரோனா தடுப்பூசியை அனுப்பி வைக்க முடியாததற்கான  காரணத்தை தெரிவித்திருக்கிறது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தங்களிடமுள்ள சுமார் 8 கோடி தடுப்பூசிகளை இந்தியா போன்ற பிற நாடுகளுக்கு வழங்குவதாக தெரிவித்திருந்தார். அதன்படி கடந்த சில வாரங்களாக அமெரிக்காவின் தடுப்பூசிகள் நேபாளம், வங்காளதேசம், பூடான் மற்றும் பாகிஸ்தான் போன்ற பல்வேறு நாடுகளுக்கு அனுப்பப்பட்டது.

எனினும் இந்திய நாட்டிற்கு மட்டும் அனுப்பி வைக்கப்படவில்லை. இது தொடர்பில் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளரான, நெட் பிரைஸ் தெரிவித்துள்ளதாவது, இந்திய அரசு நன்கொடையாக அளிக்கப்படும் தடுப்பூசிகளை வாங்குவது குறித்த சட்டவிதிகளை ஆராய்ச்சி செய்வதற்காக மேலும் சில காலம் தேவை என்று தெரிவித்திருக்கிறது.

எனவே இந்தியாவிடமிருந்து எங்கள் தடுப்பூசிக்கு அனுமதி கிடைத்தால், உடனடியாக அனுப்பப்படும். நாங்கள் தடுப்பூசி அனுப்புவதற்கு முன்பு அனைத்து நாடுகளும் தங்களுக்குரிய உள்நாட்டு செயல்பாடுகளையும், ஒழுங்கு முறைககளையும், சட்ட நடைமுறைகளையும்  மேற்கொண்டிருக்க வேண்டும். எனவே தான் இந்தியா சட்ட முறைகளில் ஆராய்ச்சி மேற்கொள்ள அவகாசம் கேட்டிருக்கிறது. அதன்பின்பு உடனடியாக தடுப்பூசி அனுப்பப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |