பிரபல நடிகை வனிதா விஜயகுமார் விஷ்வல் எஃபெக்ட்ஸ் இயக்குநரான பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்ய இருப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். அதே போல கடந்த 27ம் ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்தது . லாக் டவுன் என்பதால் பெரிய அளவில் கொண்டாட்டங்கள் இல்லாமல் நண்பர்கள் மற்றும் சில உறவினர்கள் முன்னிலையில் இந்த திருமணம் அவரது இல்லத்தில் நடைபெற்றது.
இதற்கிடையில், பீட்டர் பவுலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் சென்னை வடபழனி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதாவது, பீட்டர் பால் ” என்னை விவாகரத்து செய்யாமல் வனிதா விஜயகுமார் என்பவரை மறுமணம் செய்து கொண்டுள்ளார்”. மேலும், , தங்களுக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும், ஏழு ஆண்டுகளாக பிரிந்து இருப்பதாகவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து பிரபல நடிகையும் சமூக ஆர்வலருமான லட்சுமி ராமகிருஷ்ணன் தனது கருத்தினை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், நான் இப்பொழுது தான் செய்திகளைப் பார்த்தேன் !! அந்த மனிதன் ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளைப் பெற்றிருக்கிறார், விவாகரத்து செய்யவில்லை !!! படித்த ஒருவர் எப்படி இத்தகைய தவறு செய்ய முடியும்? !! அதிர்ச்சி !!! #VanithaPeterpaulWedding முடிவடையும் வரை முதல் மனைவி ஏன் காத்திருந்தார், ஏன் அதை நிறுத்த முயற்சிக்கவில்லை ?என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
https://twitter.com/LakshmyRamki/status/1277171553679990785