Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி பன்றீங்க? என்று கேட்ட மகனை பாட்டிலால் குத்திய தந்தை!

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அடுத்துள்ள வாடிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர்  தினமும் மது அருந்திவிட்டு வந்து மது போதையில் தன் மகன் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர்களை அவதூறான வார்த்தைகளால் பேசி வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று மணிகண்டனின் மகன் சதீஸ்குமார் ஏன் தினமும் இப்படி குடிச்சிட்டு வந்து  பேசுறீங்க ? என்று  கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் தன் கையில் வைத்திருந்த மது பாட்டிலை உடைத்து மகன்  என்றும் பாராமல் சரமாரியாக குத்தி காயப்படுத்தியுள்ளார். இதை அடுத்து சதீஸ்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து சதீஷ்குமார்  காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர்  மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Categories

Tech |