Categories
அரசியல் மாநில செய்திகள்

”தமிழிசை” வீணடிச்சுட்டாங்க…! எதுக்கு இந்தி படிக்கணும் ? அது ”மரண சாசனம்” – கோபத்தில் சீரிய சீமான் ..!!

தமிழ் மட்டுமில்லை, எல்லா மாநில மொழிகளும், எல்லா தேசிய இனங்களும் தாய் மொழிகளும் இருக்கப் போவதில்லை. அவர்களுடைய நோக்கமே ஹிந்தி, சமஸ்கிருதம் தான். இங்கிலீஷ் கூட கிடையாது. சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு விவசாயிகளுக்கு நல்லது என்று சொல்லவேண்டியது தான். யாரு சாகிறார்களோ அவர்களுக்கு நல்லது என்று சொல்லிவிட்டு போக வேண்டியது தானே. எங்கள் மொழியில் முன் நிறுத்துவதில் என்ன இருக்கு ?

சமஷ்கிருதம், ஹிந்திக்கு வரலாறு இருக்குமா ? என்னுடைய இலக்கியம் இருக்குமா ? என்னுடைய தாய் மொழி இருக்குமா ? அதெல்லாம் கட்டாயமாக மூன்றாம் வகுப்பு வரைக்கும்,  ஐந்தாம் வகுப்பு வரைக்கும் தாய் மொழியில் படிக்கலாம். பேரறிஞர் அண்ணா சொல்கிறார்,  ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு எல்லாம் அது ஒரு கடல், தமிழ் முதுகலை படித்து ஆய்வு படிக்கின்ற மாணவர்களே பொருள் தெரியாமல் தேடி கொண்டிருக்கிறார்கள்.

பெரிய பெரிய அறிஞர்கள் எல்லாம் சொல்கிறார்கள். புதிய கல்விக் கொள்கை என்பது நமது குழந்தைகளுக்கான மரண சாசனம் என்று, நான் சொல்லவில்லை இந்த வார்த்தையை.. அம்மாவுக்கு ( தமிழிசைக்கு )  பெயரை வைத்த குமரி அனந்தன் அவரிடம் தான் கேட்க வேண்டும் எதற்கு இப்படி ஒரு பெயரை வைத்து வீணடித்து விட்டீர்கள் என்று,

நீங்கள் ஒரு வெளிப்படையாக ஒன்று பேசணும். நீட் தேர்வு எழுத போற பிள்ளைகள், 12-ம் வகுப்பு எழுதப்போகின்ற பிள்ளைகளுக்கு எத்தனை வயசு? 16, 17 வயசாகிவிட்டது. அந்த வயசிலேயே என் பிள்ளைகளுக்கு ஒரு முதிர்ச்சி, ஒரு சின்ன அவமானம்,  ஏச்சு – பேச்சுகளை தாங்குகின்ற பக்குவம் வரமாட்டேங்குது. அப்பவே தற்கொலை செய்து உயிரை  மாய்த்துக் கொள்கிறார்கள், சமூகத்தை எதிர்கொள்ள முடியாமல் என வேதனைப்பட்டார்.

Categories

Tech |