அரசு கவனம் செலுத்த வேண்டிய பிரச்சனைகள் ஏராளமாக இருக்கும்போது ஜாமீனை ரத்து செய்வதில் ஏன் இவ்வளவு அக்கறை காட்டுகிறது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பட்டியலின சமூக மக்களை தவறாக பேசியது தொடர்பாக திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி மீது புகார் அளிக்கப்பட்டது. அந்த புகார் தொடர்பாக தேனாம்பேட்டை காவல் நிலைத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நிலையில், இந்த வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. அதில் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவில் சரணடையத் தயாராக இருப்பதாகவும், ஜாமின் வழங்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனிடையே அவர் கைது செய்யபட்டு, முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். இதில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
ஆர்.எஸ். பாரதிக்கு வழங்கப்பட்ட ஜமீனை ரத்து செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தை நாடிய சென்னை குற்றப்பிரிவு போலீசாருக்கு, உயர்நீதிமன்றத்த்தை நாடாமல் நேரடியாக உச்சநீதிமன்றத்தை நாடியது முறையானதல்ல என்றும், உயர்நீதிமன்றம் சென்று தான் உச்ச நீதிமன்றம் வரவேண்டும் முதலில் உய்ரநீதிமன்றம் செல்லுங்கள் என்று உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டதது .
இதையடுத்து உயர் நீதிமன்றத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி சதீஷ்குமார் அரசு ஆர்வம் காட்ட வேண்டிய பிரச்சினைகள் எவ்வளவு நாட்டில் இருக்கும் போது, ஏன் ஆர் எஸ் பாரதி ஜாமீன் வழங்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு நீதிமன்றமாக அரசு அவசர படுகிறது ? என்று கேள்வி எழுப்பினர்.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தினார்கள் என்று கூற அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்த ஒரு வழக்கை ரத்து செய்த நேரடியாக உயர்நீதிமன்றத்தை தான் நாட வேண்டுமே தவிர நேரடியாக உச்சநீதிமன்றம் போனது தவறு என்றும் தெரிவித்தார். இதையடுத்து இந்த வழக்கு குறித்த மனுவை 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.