நீதிபதிகளை நியமிப்பதில் மத்திய அரசு காலதாமதம் செய்வதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் பெல்ஜியம் முறையில் நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசானது நீதிபதிகளை நியமிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. பெல்ஜியம் அடிப்படையில் நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்ற பரிந்துரையை ஏற்பதற்கு மத்திய அரசுக்கு எதற்காக காலதாமதம் ஆகிறது என சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த கால தாமதத்திற்கு நீதிபதிகள் வருத்தம் தெரிவித்ததோடு காலதாமதம் ஆவதற்கான காரணத்தை மத்திய அரசு உரிய முறையில் விளக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் கடந்த வருடம் கொண்டு வந்த கோர்ட்டின் விதிமுறைகளை மத்திய அரசு மீறுவதாகவும் நீதிபதிகள் சுட்டிக் காட்டியுள்ளனர்.