Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

ஏன் ? அப்படி வச்சிங்க…! ”நாங்க ஜனநாயக நாடு” இந்தியாவை சீண்டிய அமெரிக்கா …!!

சர்வதேச மத சுதந்திரத்தை மீறும் நாடுகள் பட்டியலில் இந்தியாவை சேர்த்ததற்கு அமெரிக்காவிற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது

சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஐக்கிய அமெரிக்கா ஆணையம் ஆண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் இந்தியாவில் அதிகரித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மத சுதந்திரத்தை மீறும் நாடுகள் என நைஜீரியா, வடகொரியா, எரித்ரியா, இந்தியா, ஈரான், பர்மா, சீனா, ரஷ்யா, சிரியா, பாகிஸ்தான், சவுதி அரேபியா, துர்க்மெனிஸ்தான், தஜிகிஸ்தான், வியட்நாம் என மொத்தம் 14 நாடுகளை பட்டியலிட்டுள்ளது.

அமெரிக்க ஆணையம் :

1998 ஆம் ஆண்டு அமெரிக்க அரசால் நிறுவப்பட்டது தான் மத சுதந்திரத்திற்கான ஐக்கிய அமெரிக்க ஆணையம். கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் வடகொரியா பாகிஸ்தான் சீனா உள்ளிட்ட 14 நாடுகள் உள்ள பட்டியலில் முதல் முறையாக இந்தியாவும் இடம் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் பரிந்துரைத்த அரசாங்கங்கள் திட்டமிட்டு மத சுதந்திரம் மீறல்களில் ஈடுபடுகின்றது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருளாதார தடை : 

சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை மற்றும் துன்புறுத்தல் பற்றிய பிரச்சாரங்களுக்கு தண்டனை இல்லாத சூழலை அரசு உருவாக்கி வருகின்றது. மத சுதந்திரத்தை மீறியதால் இந்திய அரசு நிறுவனங்களுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

பாஜக ஆட்சி : 

2019ஆம் ஆண்டு மே மாதம் பாரதிய ஜனதா, பாராளுமன்றத்தில் ஆட்சி அமைத்ததும் இந்தியா முழுவதிலும் குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக மத சுதந்திரத்தை மீறும் வகையில் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வருகின்றன. இந்த வருடம் பிப்ரவரி மாதம் டெல்லியில் 3 நாட்கள் வன்முறை நடந்துள்ளது. முஸ்லிம் பகுதிகள் தாக்கப்பட்டுள்ளது. டெல்லி காவல்துறை உள்துறை அமைச்சகத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டு தாக்குதலை தடுக்க தவறியது மற்றும் நேரடியாக வன்முறையில் பங்கேற்றது போன்ற தகவல்கள் வந்துள்ளன எனவும் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.

இந்தியா கண்டனம் : 

இந்திய இதற்கு தரப்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்ததோடு, இப்படியான குற்றச்சாட்டுகளைஉம இந்திய அரசு நிராகரித்துள்ளது. இது குறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா கூறியதாவது “இந்தியா குறித்த சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஐக்கிய அமெரிக்க ஆணையம் (யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப்) ஆண்டு அறிக்கையில் வெளியிட்ட குற்றச்சாட்டுகளை நாங்கள் ஏற்க மாட்டோம். இந்தியாவுக்கு எதிரான ஒருதலைபட்சமாக கூறப்படும் கருத்துக்கள் புதிதல்ல. வட கொரியா, சீனா போன்ற சர்வாதிகார ஆட்சிகளை போன்று இந்தியா அல்ல. இந்தியா ஜனநாயக நாடு என்று இந்தியா விளக்கம் அளித்துள்ளது.

Categories

Tech |