மதுரை மாநகராட்சி ஆதிமூலம் தொடக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்த பின் அங்கு பேசிய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், கருணை வடிவமான திட்டம் தான் இந்த காலை சிற்றுண்டி திட்டம். நான் சென்னையில் அடிக்கடி மாநகராட்சி பள்ளி, அரசு பள்ளிகளுக்கு ஆய்வு மேற்கொள்கின்ற போது, ஒரு முறை ஒரு பள்ளிக்கு நான் சென்றேன்.
ஒரு நிகழ்ச்சிக்காக போயிருந்தேன். அப்போ அங்க இருக்க கூடிய பிள்ளைகளை பார்த்து என்ன படிக்கிற ன்று கேட்டு, ஏன் டயர்டா இருக்க ? ஏன் சோர்வா இருக்குன்னு கேட்டேன் ? வழக்கமா கேட்டேன். காலையில நாங்க எப்போதும் சாப்பிடுவதில்லை அப்படின்னு அந்த குழந்தை சொல்லிச்சு.
காலையில் சாப்பிடாமல் அப்படியே ஸ்கூலுக்கு வந்துருவோம் அப்படின்னு சொன்ன உடனே எனக்கு அதிர்ச்சியாக போயிடுச்சு. உடனே நான் அதிகாரிகளை ஆலோசித்தேன். நிறைய பிள்ளைகள் காலையில் சாப்பிடாம தான் வராங்க அப்படின்னு தகவல் அதிகாரிகள் சொன்னாங்க. அப்படியானால் உடனடியாக காலை உணவு திட்டத்தை நாம் தொடங்கியாக வேண்டும் என்று நான் உத்தரவிட்டேன்.
பசியோடு பள்ளிக்கு வரக்கூடிய பிள்ளைகள் பட்டினியாக இருந்தால், அவர்களுக்கு பாட சொல்லி கொடுக்கக் கூடாது, அப்படின்னு நினைச்சேன். அந்த வரிசையில் இன்றைய நாள் காலை உணவு வழங்கும் திட்டத்தை நாம் தொடங்கி இருக்கின்றோம் என முக.ஸ்டாலின் தெரிவித்தார்.