ப்ளூ சட்டை மாறன் படங்களை விமர்சிப்பது குறித்து பேசியுள்ளார்.
ப்ளூ சட்டை மாறன் யூடியூபில் என்ன படம் ரிலீஸ் ஆனாலும் விமர்சிப்பார். இப்படி படங்களை விமர்சிப்பதன் மூலம் இவர் பிரபலமானார். இதனையடுத்து இவர் ”ஆன்டி இண்டியன்”என்ற படத்தை இயக்கினார். இந்நிலையில், இவர் ஏன் அனைத்து படங்களையும் விமர்சிக்கிறேன் என சமீபத்தில் கூறியுள்ளார்.
அதில் அவர், படம் நன்றாக இருந்தால் மக்கள் கொண்டாடுவார்கள். மேலும் நான் விமர்சனம் செய்த புதிதில் அனைவரும் என்னை திட்டினார்கள். ஆனால் எனக்கு அந்த படம் பிடிக்கவில்லை என்பது எனது கருத்து. இதனையடுத்து, ஒரு படத்தை பார்க்கும் போது ஏற்பட்ட உணர்வை தான் நான் வெளிப்படுத்துகிறேன் எனவும் கூறியிருக்கிறார்.