Categories
கிரிக்கெட் விளையாட்டு

WI VS AUS : 2-வது ஒருநாள் போட்டி …. வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி ….!!!

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில்  வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது .

வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இருஅணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி பார்படாசில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. இதில் 45 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா அணி தடுமாறியது. இறுதியாக 45.1 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அல்ஜாரி ஜோசப், ஹொசைன் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதன்பிறகு களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 188 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது. இதில் தொடக்க வீரரான  ஷாய் ஹொப் 38 ரன்களில் ஆட்டமிழந்தார்.இதனால் 72 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்தது. இதன்பிறகு களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் – ஜேசன் ஹோல்டர் ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றனர். இறுதியாக 38 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களை குவித்து அபார வெற்றி பெற்றது. இதில் அதிரடியாக விளையாடிய நிக்கோலஸ் பூரன் 59 ரன்கள் குவித்து  இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் இரு அணிகளுக்கிடையேயான ஒருநாள் தொடரில் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.

Categories

Tech |