வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக அலெக்ஸ் கேரி நியமிக்கப்பட்டுள்ளார் .
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதனிடையே இரு அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டி நாளை தொடங்குகிறது. இந்நிலையில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கு ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனான இருக்கும் ஆரோன் பிஞ்ச்-க்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது .
A big congrats to Alex Carey who will become the 26th man to captain Australia in ODI cricket tomorrow!
Aaron Finch has been ruled out of the #WIvAUS series opener with a knee injury. pic.twitter.com/7q2AVGeazk
— Cricket Australia (@CricketAus) July 19, 2021
இதனால் காரணமாக நாளை நடக்க உள்ள போட்டியில் கலந்துகொள்ள மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் துணைக் கேப்டனாக அலெக்ஸ் கேரியை ஒருநாள் போட்டியின் கேப்டனாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நியமிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 26-ஆவது நபராக அலெக்ஸ் கேரி ஆஸ்திரேலிய அணிக்கு ஒருநாள் கிரிக்கெட் கேப்டனாக பொறுப்பெற்றுள்ளார் .