Categories
கிரிக்கெட் விளையாட்டு

WI VS AUS : வெஸ்ட் இண்டீசை பந்தாடிய ஆஸ்திரேலியா…! ஒருநாள் தொடரை வென்றது ….!!!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது . 

வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 ஒருநாள் மற்றும்       5  டி20 போட்டிகளில் விளையாடியது. இதில் நடைபெற்ற டி20 தொடரில்4-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கிடையேயான ஒருநாள் போட்டி நடைபெற்று வந்தது. இதில் நடந்த முதல் 2  போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று சமநிலையில் இருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான           3- வது ஒருநாள் போட்டி இந்திய நேரப்படி இன்று அதிகாலையில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

இறுதியாக 152 ரன்களுக்குள் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆல் அவுட் ஆனது. இதில் அதிகபட்சமாக  தொடக்க வீரர் லீவிஸ் 55 ரன்கள் எடுத்தார்.ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளும் , ஹசில்வுட், அஷ்டோன் அகர் மற்றும் ஆடம் ஜம்பா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர் .இதன் பிறகு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 153 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது. இறுதியாக ஆஸ்திரேலிய அணி 30.3 ஓவர்களிலேயே  4 விக்கெட்டை இழந்து  இலக்கை எட்டியது. இதனால் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

Categories

Tech |