வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 2-வது ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ் – அயர்லாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கிடையேயான 2-வது ஒருநாள் போட்டி 11-ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் கொரோனா தொற்றால் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி நேற்று தொடங்கியது.இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 48 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்தது . இதில் அதிகபட்சமாக ரோமாரியோ ஷெப்பர்டு 50 ரன், ஒடியன் ஸ்மித் 46 ரன், புரூக்ஸ் 43 ரன் எடுத்தனர்.
அயர்லாந்து அணி தரப்பில் ஆண்டி மெக்பிரின் 4 விக்கெட், கிரெய்க் யங் 3 விக்கெட், ஜோஷ்வா லிட்டில் 2 விக்கெட் கைப்பற்றினர். இதன் பிறகு 230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி விளையாடியது.இறுதியாக 32 ஓவரில் 157 எடுத்திருந்தபோது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.இதனால் டி.ஆர்.எஸ் முறையில் 36 ஓவர்களில் 168 எடுத்தால் வெற்றி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இறுதியாக 32.3 ஓவர்களில் அயர்லாந்து அணி 168 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இதனிடையே இரு அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் நடைபெறுகிறது.