வெஸ்ட் இண்டீஸ்-அயர்லாந்து அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 48.5 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் குவித்தது.இதில் அதிகபட்சமாக கேப்டன் பொல்லார்ட் 69 ரன்னும், ஷமர் ப்ரூக்ஸ் 93 ரன்னும் எடுத்தனர்.
அயர்லாந்து அணி சார்பில் மார்க் அதிர், கிரேக் யங் தலா 3 விக்கெட் கைப்பற்றினர். இதன்பிறகு 270 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு அயர்லாந்து அணி களமிறங்கியது. இறுதியாக 49.1 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. இதில் அதிகபட்சமாக பால்பிர்னி 71 ரன்னும் , டெக்டர் 53 ரன்னும் எடுத்தனர். இதன் மூலம் 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.