Categories
கிரிக்கெட் விளையாட்டு

WI VS PAK 2-வது டெஸ்ட் : ஷஹீன் அப்ரிடி அசத்தல் பந்துவீச்சு …. 109 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி ….!!!

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 109 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி தொடரை சமன் செய்தது .

வெஸ்ட் இண்டீஸ் – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில்  நடைபெற்றது .இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது . அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்தபோது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இதில் அதிகபட்சமாக பவாத் ஆலம் 124 ரன்களும் , கேப்டன் பாபர் அசாம் 75 ரன்களும் குவித்தனர் .வெஸ்ட் இண்டீஸ் தரப்பினர் கீமர் ரோச் மற்றும் சீலஸ் தலா  3 விக்கெட்டும் ,ஹோல்டர் 2 விக்கெட்டும் கைப்பற்றினர். இதன்பிறகு களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் குவித்தது.

இதில் அதிகபட்சமாக பானர் 37 ரன்களும் , பிளாக்வுட் 33 ரன்கள் மற்றும் ஹோல்டர் 26 ரன்கள்  எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஷஹீன் அப்ரிடி 6 விக்கெட்,மொகமது அப்பாஸ் 3 விக்கெட் மற்றும்  பஹீம் அஷ்ரப் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். இதன்பிறகு 152 ரன்கள் முன்னிலையில் இருந்த பாகிஸ்தான் அணி  2-வது இன்னிங்ஸை தொடங்கியது . இறுதியாக 6 விக்கெட் இழப்பிற்கு 179  ரன்கள் எடுத்தபோது டிக்ளேர் செய்தது. இதன்பிறகு 329 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது . இதில் 4-ம் நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 49 ரன்கள் குவித்தது .இதில் பிராத்வெயிட் 17 ரன்னுடனும் , அல்ஜாரி ஜோசப் 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 5-ம் நாள் ஆட்டம் நடைபெற்றது. ஆனால் பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் அணி தடுமாறியது .இதனால் சீரான இடைவெளியில் வெஸ்ட் இண்டீஸ் அணி விக்கெட்டுகளை இழந்தது . உணவு இடைவேளைக்கு முன்பாக மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது .இதன் பிறகு மீண்டும் ஆட்டம் தொடங்கியது .இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 219 ரன்னில் சுருண்டது .இதனால் 109 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில்  1-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி தொடரை சமன் செய்தது .இதில் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது ஷஹீன் அப்ரிடிக்கு அளிக்கப்பட்டது.

Categories

Tech |