வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2-வது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ் – பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது .இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 51 ரன்களும் ,ரிஸ்வான் 46 ரன்களும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பின் ஹோல்டர் 4 விக்கெட்டுகளும் , பிராவோ 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
இதன்பிறகு களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 158 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது. இதில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் அதிரடியாக விளையாடி 62 ரன்களை குவித்தார் .இறுதியாக 20 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இதனால் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி முன்னிலை வகிக்கிறது.