Categories
கிரிக்கெட் விளையாட்டு

WI VS PAK : சதம் அடித்து அசத்திய பவாத் ஆலம் …. பாகிஸ்தான் அணி 302 ரன்கள் குவிப்பு ….!!!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது டெஸ்டில் மூன்றாவது நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி 302 ரன்களை குவித்துள்ளது .

வெஸ்ட் இண்டீஸ் – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் தொடங்கியது . இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது. ஆனால் தொடக்கத்திலேயே பாகிஸ்தான் அணி 2 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து  தடுமாறியது. இதன்பிறகு களம் இறங்கிய கேப்டன் பாபர் அசாம் – பவாத் ஆலம் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் கேப்டன் பாபர் அசாம் 75 ரன்கள் எடுத்தார் . இதையடுத்து பவாத் ஆலம் 76 ரன்கள் எடுத்த போது காயம் காரணமாக வெளியேறினார். இதனால் முதல் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது.

ஆனால் 2-ம் நாள் ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசாமல் கைவிடப்பட்டது. இந்த நிலையில் 3-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில்பஹீம் அஷ்ரப்  26 ரன்களும் ,ரிஸ்வான் 31 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதன் பிறகு மீண்டும் களமிறங்கிய பவாத் ஆலம் பொறுப்புடன் விளையாடி   சதம் அடித்தார் . இதனால் இறுதியாக பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்களை  எடுத்தபோது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. வெஸ்ட் இண்டீஸ்அணி  தரப்பில் கீமர் ரோச் மற்றும் சீலஸ்  தலா 3 விக்கெட்டும் , ஹோல்டர் 2 விக்கெட்டும் கைப்பற்றினர். இதன் பிறகு வெஸ்ட்இண்டீஸ் தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. இதில் களமிறங்கிய தொடக்க வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்து வெளியேறினர் .இதனால் 3-ம் நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் குவித்துள்ளது.

Categories

Tech |