Categories
கிரிக்கெட் விளையாட்டு

WI VS SA : அதிரடி காட்டிய டி காக் … ! தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் வெற்றி …!!!

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2 டெஸ்ட்  மற்றும் ஐந்து டி 20 போட்டிகள் கொண்ட      தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி விளையாடுகிறது .

தென் ஆப்பிரிக்கா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான  முதல் டெஸ்ட் போட்டி செயின்ட் லூசியாவில் நடந்தது.  இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. ஆனால்  வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 97 ரன்களில் சுருண்டது . தென் ஆப்பிரிக்கா சார்பில் லுங்கி நிகிடி 5 விக்கெட், அன்ரிச் நோர்ஜே 4 விக்கெட்டை கைப்பற்றினர் . இதன்பிறகு முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்ரிக்கா அணி 322 ரன்களை குவித்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக  டி காக் 141 ரன்களை குவித்தார். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஹோல்டர் 4 விக்கெட்டும் ,ரோச் 2 விக்கெட்டும் மற்றும் ஜேடன் சீலஸ் 3 விக்கெட்டும் கைப்பற்றினர் .

இதில் 225 ரன்கள் பின்தங்கி இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 2 வது இன்னிங்சிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது . இதனால் 2 ம் நாள் முடிவில்  வெஸ்ட் இண்டீஸ் அணி  4 விக்கெட் இழப்பிற்கு  82 ரன்களை எடுத்திருந்தது . அணியில் ரோஸ்டன் 21 ரன்கள் , பிளாக் வுட் 12 ரன்கள் எடுத்து  களத்தில் இருந்தனர். இந்த நிலையில் 3 -வது  நாள் ஆட்டம் தொடங்கியது . இதில் ஒருபுறம் விக்கெட்டுகளை இழக்க மறுபுறம் ரோஸ்டர் சேஸ் தாக்குப்பிடித்து அரை சதம் அடித்த நிலையில், 62 ரன்னில் அவுட்டானார்.  இறுதியாக 2 வது இன்னிங்சில்  வெஸ்ட்இண்டீஸ் அணி  162 ரன்களை எடுத்து ஆல்அவுட் ஆனது . இதனால் தென் ஆப்பிரிக்க அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 63 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி வெற்றி பெற்றது.இதில்  டி காக்கிற்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

Categories

Tech |