Categories
கிரிக்கெட் விளையாட்டு

WI VS SA : அதிரடி காட்டிய லெவிஸ்….! தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி …. வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி …!!!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி  8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .

வெஸ்ட் இண்டீஸ் அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள  தென் ஆப்பிரிக்கா அணி டெஸ்ட் போட்டி  மற்றும் 5  டி20 தொடரில் விளையாடி வருகிறது.  இந்திய நேரப்படி நள்ளிரவில் நடந்த  முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக வான் டெர் டுசன் 56 ரன்களும் ,  டி காக் 37 ரன்களும் எடுத்தனர்.

இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி 161 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கியது.  தொடக்க வீரர்களாக பிளட்சர் , எவின் லெவிஸ் களமிறங்கினர்.இதில்  பிளட்சர் 30 ரன்களில் ஆட்டமிழக்க,  எவின் லெவிஸ் அதிரடி காட்டினார். இவர் 35 பந்துகளில் 4 பவுண்டரி ,7 சிக்சர் அடித்து விளாசி 71 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்ததாக கெயில் 32 ரன்களும் , ரசல் 23 ரன்களும்  எடுக்க இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 15 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.

Categories

Tech |