விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் நான்கு முறை வெற்றி பெற்று அதிமுகவே ஆதிக்கம் செலுத்தி வருகின்றது.
தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி , விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இரண்டு தொகுதிகளுக்கும் வருகின்ற அக்டோபர் 21_ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறுமென்று தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா தெரிவித்தார்.இதில் ஒரு தொகுதிதான் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி. இது புதிதாக உருவாக்கப்பட்ட தொகுதியாகும். இதில் விழுப்புரம் தாலுக்கா பகுதியை சேர்ந்த பல்வேறு ஊராட்சிகள் மற்றும் விக்கிரவாண்டி பேரூராட்சி பகுதிகள் உள்ளடக்கி உள்ளன.
புதிதாக உருவாக்கப்பட்ட விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு நடக்க இருக்கும் இந்த இடைத்தேர்தல் தான் அங்கு நடைபெற இருக்கும் 3_ஆவது சட்டமன்ற தேர்தலாகும். இதற்கு முன்பு இங்கு 2011 மற்றும் 2016 ஆகிய இரண்டு முறைதான் இதற்கு முன் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதை தொடர்ந்து அங்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த கே. ராதாமணியின் மரணத்தை அடுத்து தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
2011_ஆம் ஆண்டு : ராமமூர்த்தி இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
பெற்ற வாக்குகள் – 78656
இரண்டாம் இடம் : ராதாமணி திமுக பெற்ற வாக்குகள் – 63759
2016_ஆம் ஆண்டு : கே. ராதாமணி திமுக பெற்ற வாக்குகள் – 63757
இரண்டாம் இடம் ஆர். வேலு பெற்ற வாக்குகள் அதிமுக – 56845
இதில் 2011_ஆம் ஆண்டு வெற்றி பெற்ற ராமமூர்த்தி அதிமுக கூட்டணியில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிட தக்கது.எனவே திமுக , அதிமுக இங்கு சம பலத்துடன் மோதுகின்றன.