ஈரோடு அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை மனைவியை கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் நம்பியூர் பகுதியில் வசித்து வந்தவர் குமார். இவர் அதே பகுதியில் வாடகைக்கு ஆட்டோ ஒன்றை எடுத்து ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார் . இவரும் இந்துமதி என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் நடைபெற்ற நிலையில், ஒரு வயதில் மகனும் உள்ளார். இந்நிலையில் ஆட்டோ டிரைவர் குமார் நேற்று சாக்கு மூட்டைக்குள் காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
முதற்கட்ட விசாரணையில், குமாரின் மனைவி இந்துமதிக்கும், கோபி பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் என்ற நபருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக ஊர் முழுக்க அரசல் புரசலாக பேசியதன் மூலம் தெரிய வந்தது. பின் இந்துமதியிடம் காவல் துறையினர் விசாரிக்க, அவர் அழுது புலம்பியபடி, முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். அதேபோல் ஸ்ரீதரிடம் விசாரிக்கச் செல்லும் முன் இந்துமதியும் ஸ்ரீதரும் ஒரே நேரத்தில் மாயமாகியுள்ளனர். இதையடுத்து தப்ப முயன்ற அவர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி நேற்று மாலை கைது செய்தனர். பின் மேற்கொண்ட விசாரணையில் இந்துமதி இவ்வாறு தெரிவித்தார்.
கோபி பகுதியில் அட்டை கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கும் போது குமார்க்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. எனக்கு மிகவும் பிடித்திருந்ததால் அவரை காதல் திருமணம் செய்து கொண்டேன். இருவருக்கும் மகனும் பிறந்துவிட்டான். இதையடுத்து பச்சை மலையில் உள்ள லேத் பட்டறை ஒன்றில் மீண்டும் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தேன். அங்கே வந்த ஸ்ரீதர் என்பவருக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. குமாரை பார்த்தபோது ஏற்பட்ட அதே உணர்ச்சிகள் ஸ்ரீதரை பார்க்கும்போது அதிக அளவில் ஏற்பட்டதால் அவரை எனக்கு மிகவும் பிடித்து காலப்போக்கில் அது காதலாக மாறியது.
நாங்கள் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருக்க ஆசைப்பட்டோம். இதற்கு எனது கணவர் குமார் தடையாக இருந்தார். உண்மையை அறிந்த போதிலும், அவர் என்னை கண்டிக்க மட்டுமே செய்தார். இருப்பினும் எனக்கு ஸ்ரீதரை தான் பிடித்திருந்தது. எனவே நாங்கள் குமாரை கொலை செய்ய திட்டமிட்டோம். அதன்படி, சம்பவத்தன்று அவர் உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் படுத்து இருந்தார். அப்போது ஸ்ரீதரை வரவழைத்து, முதலில் நான்தான் தலையணையால் முகத்தை அமுக்கினேன்.
பிறகு ஸ்ரீதர் கட்டையால் கணவரை பயங்கரமாக தாக்கி இருவரும் சேர்ந்து கொலை செய்து பின் சாக்கு மூட்டையில் போட்டு நள்ளிரவில் ஸ்கூட்டி மூலம் கொண்டு சென்று ஏரிக்கரையில் வீசிவிட்டோம் என்று தெரிவித்துள்ளார். இந்துமதியுடன் சேர்ந்து குமாரை கொலை செய்த ஸ்ரீதரும் காதல் திருமணம் செய்து கொண்டவர் தான். அவருக்கு இரட்டை குழந்தைகள் உள்ளன. ஒருவருக்கு ஒருவர் பிடித்து காதல் திருமணம் செய்து கொண்டு பின் இந்துமதி கணவனுக்கும் ஸ்ரீதர் அவரது மனைவிக்கும் இப்படி ஒரு துரோகத்தை செய்தது கேவலத்தின் உச்சமாக பார்க்கப்படுகிறது.