Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

தகராறில் செருப்பால் தாக்கிய மனைவி…. ஆத்திரமடைந்த கணவனின் செயல்…!

குடும்ப தகராறில் மனைவி செருப்பால் தாக்கியதால் ஆத்திரமடைந்த கணவன் இரும்பு கம்பியால் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

 

வேலூர் மாவட்டம் பத்திரபல்லி கிராமத்தை சேர்ந்த யுவராஜ் என்பவர் அதே பகுதியை சேர்ந்த சுப்புலட்சுமி என்ற பெண்ணை காதலித்து 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று கணவன் மனைவி இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இருவருக்குமிடையே தகராறு அதிகரித்ததால் யுவராஜை சுப்புலட்சுமி செருப்பால் அடித்ததாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த யுவராஜ் அருகிலிருந்த இரும்பு ஊதாங்குழலால் சுப்புலட்சுமியின் தலையில் பலமாக அடித்துள்ளார்.

இதனால் சுப்புலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பேர்ணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். எனவே அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சுப்புலட்சுமியின் பெற்றோர் யுவராஜ் மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரை  கைது செய்த காவல்துறையினர் நீதிமன்ற காவலில் குடியாத்தம் கிளைச் சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக குடியாத்தம் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

Categories

Tech |