பிரியாணி வாங்கித் தராத கோபத்தில் கணவர் காப்பாற்றி விடுவார் என்ற நம்பிக்கையில் மனைவி தீக்குளித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
மகாபலிபுரம் அருகே இருக்கும் பூஞ்சேரி பகுதியில் மனோகரன் தனது மனைவி சௌமியா மற்றும் தனது 2 குழந்தைகளுடன் வசித்து வருகின்றார். கடந்த புதனன்று மனோகரன் வசித்து வரும் வீட்டின் உரிமையாளர் மனோகரனிடம் பணம் கொடுத்து பிரியாணி வாங்கி தருமாறு கேட்டுள்ளார். இதைப் பார்த்துக்கொண்டிருந்த மனோகரனின் மனைவி தனக்கும் பிரியாணி வேண்டுமென கேட்டுள்ளார். ஆனால் மனோகரன் தன்னிடம் பணம் இல்லை எனக் கூறிவிட இதனால் கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் மனோகரன் சௌமியாவிடம் உன்னை எனக்கு பிடிக்கவில்லை என கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த சௌமியா பைக்கில் இருந்த பெட்ரோலை பிடித்துக் கொண்டு மொட்டை மாடிக்கு சென்று தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். பின்னர் மருத்துவமனையில் அவரை அனுமதித்த பொழுது 80 சதவீத தீக்காயங்களுடன் சௌமியா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் வந்து விசாரிக்கையில் இறப்பதற்கு முன் தனது கணவர் காப்பாற்றி விடுவார் என்ற நம்பிக்கையில் விபரீத முடிவை அவசரப்பட்டு எடுத்து விட்டதாகவும் இப்போது குழந்தைகளையும் கணவரையும் பிரிந்து போவதை நினைக்கும் போது மிகவும் கவலையாக இருப்பதாகவும் சௌமியா உறவினர்களிடம் புலம்பியதாக தெரியவந்துள்ளது.