கணவர் திட்டியதால் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள கிடங்கன் பாண்டலம் கிராமத்தில் பிரபு என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு சிவசக்தி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சிவசக்தி தனது கணவர் பிரபுவிடம் தனக்கு பிறந்த நாள் வருவதால் அதனை கொண்டாட தேவையான பொருட்களை வாங்கி வரும் படி கூறியுள்ளார். அப்போது பிரபு சிவசக்தியை திட்டியதோடு, செத்துப் போ என்று கூறியுள்ளார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த சிவசக்தி தனது வீட்டில் இருந்த மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி கொண்டு தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து சிவசக்தியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து உடனடியாக அவரை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அதன்பின் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.