ராஜஸ்தானை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவியை கோடரியால் வெட்டிக் கொன்று அதுமட்டுமில்லாமல் தெருவில் தரதரவென இழுத்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சுனில் வால்மீகி என்ற நபர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த கணவன் தனது மனைவியை வெட்டியது மட்டுமில்லாமல் அவரின் உடலை தெருவில் இழுத்துச் சென்றுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியது.
இதையடுத்து அவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் 9 மாத குழந்தை அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்த குழந்தை தற்போது இறந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.