Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அவள் தான் எனக்கு எல்லாமே…. கணவன்-மனைவிக்கு நடந்த விபரீதம்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!

மனைவி தற்கொலை செய்து கொண்டதால் கணவரும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டயபுரம் பகுதியில் அய்யனார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துமாரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு திருமணம் முடிந்து 5 ஆண்டுகள் ஆகியும் இன்னும் குழந்தை பிறக்கவில்லை. இந்நிலையில் குழந்தை இல்லாத விரக்தியில் இருந்த முத்துமாரி தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வெளியே சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்த அய்யனார் தனது மனைவி தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அலறி துடித்தார்.

அதன்பின் தனது மனைவி தற்கொலை செய்து கொண்டதை நினைத்து மன உளைச்சலில் இருந்த அய்யனாரும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த அய்யனாரின் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் முத்துக்குமாரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |