Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஐயோ அவருக்கு என்னாச்சு…. கணவரை காப்பாற்ற முயன்ற மனைவி…. தூத்துக்குடியில் நடந்த சோகம்….!!

கணவனை காப்பாற்ற முயன்ற மனைவி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் தெர்மல் நகர் அருகே வசிப்பவர் கருப்பசாமி. இவர் தூத்துக்குடி என்.டி.பி.எல் அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று காலையில் அவர் வேலைக்கு புறப்பட்டு வீட்டிலிருந்து நடந்து சென்று கொண்டிருந்தபோது, அந்த பகுதியில் மழைநீர் தேங்கி கிடந்தது. அருகிலிருந்த மரக்கிளை ஒடிந்து மின்சார வயரில் விழுந்திருந்தது அதனால் மின்சார வயர் அறுந்து தண்ணீரில் விழுந்திருந்தது. எனவே தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து இருந்த நிலையில், கருப்பசாமி இதனை அறியாமல் தண்ணீரில் மிதித்துள்ளார். அவரது உடலில் மின்சாரம் பாய்ந்தது.

உடனே கருப்பசாமி பயங்கரமாக சத்தமிட்டுள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் கருப்பசாமியை காப்பாற்ற முயற்சி செய்தார். ஆனால் மின்சாரத்தினால் தூக்கி வீசப்பட்டார். இதனை பார்த்துக் கொண்டிருந்த அனுஷியா தன் கணவனை காப்பாற்ற வேண்டும் என முயன்றுள்ளார். ஆனால் அவர்மேலும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் கருப்பசாமியை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து தெர்மல் நகர் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. தகவலறிந்த காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |