கணவனுடன் ஏற்பட்ட தகராறில் மனைவி தூக்குமாட்டி தற்கொலை
போரூரில் இருக்கும் ராமாபுரம் வள்ளுவர் சாலையை சேர்ந்தவர் சிவகார்த்திகேயன் ராஜராஜேஸ்வரி தம்பதியினர். சிவகார்த்திகேயன் மெட்ரோ ரயில் நிலையத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக மனைவி ராஜராஜேஸ்வரி வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார். காவல்துறையினர் இதுகுறித்து சிவகார்த்திகேயனிடம் விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் சிவகார்த்திகேயனும் ராஜராஜேஸ்வரி 6 மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்துள்ளனர் என்பது தெரியவந்தது.
அதுமட்டுமின்றி ராஜராஜேஸ்வரி 2010 ஆம் ஆண்டு சபரிநாதன் என்பவருடன் திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ளதாகவும் அது தெரிந்த அதிர்ச்சியடைந்த சிவகார்த்திகேயன் தினமும் மது குடித்துவிட்டு ராஜராஜேஸ்வரியிடம் சண்டையிட்டு உள்ளார். நேற்று முன்தினமும் எப்போதும்போல் சண்டைபோட மனமுடைந்த ராஜராஜேஸ்வரி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் என தெரியவந்தது.