கணவனின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி சடலத்தை வாங்க மறுத்து உறவினர்களுடன் பெண் ஒருவர் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நெருப்பூர் பகுதியில் ஆசைத்தம்பி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாய தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி கவிதா என்ற மனைவி உள்ளனர். இந்நிலையில் கணவனுக்கும், மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதனை அடுத்து ஆசைத்தம்பி திடீரென இறந்து விட்டதாக கவிதாவிற்கு தகவல் கிடைத்துள்ளது. இது பற்றி தகவலறிந்த கவிதா கணவர் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது உறவினர்கள் ஆசைத்தம்பியை தாக்கியதாக கவிதாவிற்கு தெரியவந்துள்ளது. அதன்பின் கவிதா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் கணவரின் சாவில் மர்மம் இருப்பதாகவும், பிரேத பரிசோதனை செய்து விசாரணை செய்ய வேண்டுமெனவும் கவிதா தெரிவித்துள்ளார்.
பின்னர் தன்னை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவிதா தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஆசை தம்பியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் கணவன் சாவில் சந்தேகம் இருப்பதினால் உடலை வாங்க மறுத்து தன்னைத் தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறையினரை கண்டித்து கவிதா மற்றும் அவரின் உறவினர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டுள்ளார். இது பற்றி தகவல் அறிந்த துணை காவல்துறை சூப்பிரண்டு சவுந்தரராஜன் சம்பவ இடத்திற்கு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார். அதன் பிறகே லை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.