Categories
உலக செய்திகள்

திருடர்கள் மனைவியை கொன்றதாக கூறிய கணவர்.. காட்டிக்கொடுத்த கைக்கடிகாரம்.. வழக்கில் அதிரடி திருப்பம்..!!

கிரீஸ் தீவில் கொள்ளையர்களால் 11 மாத குழந்தையின் தாய் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட சம்பவத்தில் அதிரடியாக திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

கிரீஸ் தீவின் ஏதேன்சில் வசிக்கும் பாபிஸ் என்ற 33 வயது நபர், தன் மனைவி கரோலின் மற்றும் தன் 11 மாத குழந்தையுடன் இரவில் தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில் திருடர்கள் துப்பாக்கிகளுடன் புகுந்து தன்னை கட்டிபோட்டுவிட்டு மனைவியை கொன்றதாக கூறியிருந்தார். அதன்பின்பு கொள்ளையர்களால் கட்டி போடப்பட்டிருந்த பாபீஸ் மற்றும் குழந்தையை காவல்துறையினர் மீட்டார்கள்.

இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் தன் குழந்தை தாயின்றி எப்படி வளரும் என்று நினைத்து பார்த்தால் வேதனையாக இருப்பதாக கூறி பாபிஸ் கதறி அழுதார். இது பார்ப்போரின் கண்களை குளமாக்கியது. இந்நிலையில் இந்த சம்பவத்தில் திடீர் திருப்பமாக பாபீஸ் தான் அவரின் மனைவியை கொன்றது தெரிய வந்துள்ளது.

காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் பாபிஸின் மனைவியின் கைக்கடிகாரத்தில் பிட்னஸ் ட்ராக்கர் பொருத்தப்பட்டிருந்தது. அதில் மேற்கொண்ட ஆராய்ச்சியில், கரோலின் கொலை செய்யப்பட்டதாக பாபிஸ் கூறியிருந்த நேரத்திற்கு சுமார் ஒரு மணிநேரம் முன்பு அவரின் இதயத்துடிப்பு நின்றவிட்டதாக கைக்கடிகாரம் காட்டியது.

எனவே காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாபிஸின் கைக்கடிகாரத்தையும் ஆய்வுக்குட்படுத்தினர். அவர் என்னை கொள்ளையர்கள் கட்டிப் போட்டதாக கூறிய நேரத்தில் அவர் வீட்டிற்குள் பல இடங்களில் நடந்து சென்றது தெரியவந்தது. எனவே காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ள, அவர் மனைவியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.

அதாவது சம்பவம் நடப்பதற்கு முதல்நாள் இரவில்  தம்பதியருக்குள் ஏற்பட்ட சண்டையில், கரோலின் குழந்தையை தொட்டிலில் வீசியிருக்கிறார். மேலும் பாபிஸிடம் வீட்டிலிருந்து வெளியே போய்விடு என்று கத்தியுள்ளார். எனவே பாபீஸ் தன் மனைவியும் குழந்தையும் தன்னை விட்டு பிரிந்து விடுவார்கள் என்ற பயத்தில் ஆத்திரமடைந்து தலையணையை வைத்து அழுத்தி மனைவியை கொன்றது தெரியவந்தது.

Categories

Tech |