Categories
மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு வந்த கள்ளக்காதலி… ஆத்திரமடைந்த மனைவியின் கொடூரச்செயல்….!!

செங்கோட்டைக்கு அருகில் ஒரு தொழிலாளி, கள்ளக் காதலியை வீட்டிற்கு அழைத்து வந்ததால், ஆத்திரமடைந்த மனைவி, கணவனின் கண்களில் மிளகாய் பொடியை தூவி அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தென்காசி மாவட்டத்தின் செங்கோட்டைக்கு அருகில் இருக்கும் திருமலாபுரம் பகுதியில் வசிக்கும் 40 வயதுடைய கட்டிடத் தொழிலாளியான முருகனுக்கு, நாச்சியார் என்ற மனைவி, இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று முருகன் தன் வீட்டிற்கு அவரின் கள்ளகாதலியை அழைத்து வந்திருக்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த நாச்சியார் அவருடன் சண்டையிட்டிருக்கிறார். சிறிது நேரத்தில் நாச்சியாருக்கும் முருகன் அழைத்து வந்த பெண்ணிற்கும் கடும் சண்டை ஏற்பட்டது. எனவே அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள், ஓடி வந்து இருவரையும் விலக்கி, அந்த பெண்ணை அனுப்பி விட்டார்கள்.

அதன் பிறகு இரவில் முருகன் மது அருந்திவிட்டு வந்து மனைவியுடன் சண்டை போட்டிருக்கிறார். இதனால் கடும் கோபமடைந்த நாச்சியார், மிளகாய் பொடியை எடுத்து வந்து கணவரின் கண்களில் தூவி கட்டையால் அடித்து கொலை செய்திருக்கிறார். இதுபற்றி தகவல் அறிந்த செங்கோட்டை காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று முருகனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பியிருக்கிறார்கள். காவல்துறையினர் நாச்சியாரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Categories

Tech |