ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்
ஒடிசா மாநிலம் கட்டாக் பகுதியை சேர்ந்தவர் பினோத் மண்டல். இவருக்கு கடந்த வருடம் நமீதா என்ற பெண்ணுடன் திருமணம் முடிந்தது. இரு வீட்டு சம்மதத்துடன் இவர்களது திருமணம் நடந்த நிலையில் கடந்த மே மாதம் 26 ஆம் தேதி பினோத் திடீரென காணாமல் போனார். இதுகுறித்து அவரது குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் பினோத்தை தேடி வந்தனர். இந்நிலையில் அங்கிருக்கும் மகாநதி ஆற்றின் அருகே பினோத்தின் சடலம் துண்டுதுண்டாக கண்டெடுக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து மாயமான அவரது வழக்கை கொலை வழக்காக மாற்றி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது நமீதாவின் செயல்களில் காவல்துறையினருக்கு சந்தேகம் உருவானதால் அவரிடம் விசாரணை மேற்கொள்ள, அதில் அவர் தனது ஆண் நண்பருடன் சேர்ந்து பினோத்தை கொலை செய்ததாக உண்மையை ஒப்புக் கொண்டார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் நமீதாவை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.